Saturday, 12 November 2016

கவிதைகளின் உறைவிடம்

கவிதைகள்
முளைத்துக்கொண்டிருக்கின்றன
உன் மீதும்
உன்மீதும்

இப்போதுமட்டுமல்ல
எப்போதும்
முப்போதும்

முளைத்துச் செடியாகி
நல்விருட்சமாகி
பெருங்காடென ஆவோமா

வண்ண வண்ணப் பறவைகள்
தங்கி இளைப்பாறும்
நல்லுறைவிடமாக!

Tuesday, 27 September 2016

கவிதைகளுடன் ஒரு உறவு

விளிப்பு
---
காலை விழித்தெழுந்தேன்
விடியலின் வாசம்
உடம்பெங்கும் பரவியது

பரந்திருக்கும் புல்வெளிக்கு வலிக்குமென
கால்களுக்குப் பதிலாக
மனதால் நடக்கிறேன்

பனிப்பூக்கள்  உடையாதிருக்க
காற்றைத் தடை செய்கிறேன்
ஓடும் நதியில் உதிரும் பூக்களின்
மெல்லிசையை நுகர்கிறேன்

வானமதில் தீட்டிக்கொண்டிருக்கும்
மேகத்தூரிகைக்களுக்குள்
ஒளிந்துவரும்  சூரியன்

என்னைப் பார்த்து ஏன்தான்
சிரித்ததோ அறியேன்
என்னை மறந்த அந்த கணத்தில்

அதிர்கிறது மணியோசை

ஐயோ ஐயோ
விடியலின் வாசம் மீறி
என் உடம்பெங்கும் வீசுகிறது
பள்ளியின் தனித்த வாசம்!